புதுப்பள்ளித் தொகுதி இடைத்தேர்தல்: உம்மன் சாண்டி மகன் அபார வெற்றி-53 ஆண்டுகளை கடந்தும் தொடரும் பயணம்

கேரள மாநிலம் புதுப்பள்ளித் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
oommen chandy
oommen chandypt web

கேரள முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது தொகுதியான புதுப்பள்ளியில் இடைத்தேர்தல் நடந்தது. அதேபோல் பிற 5 மாநிலங்களைச் சேர்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

Oommen Chandy
Oommen Chandy File Image

கேரள மாநிலத்தின் புதுப்பள்ளியில் நடந்த இடைத்தேர்தலில் மறைந்த உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.

10 ஆவது சுற்றின் முடிவில் சிபிசி (எம்) வேட்பாளரை விட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெயிக் தாமஸ் சாண்டி உம்மனிடம் தோல்வி அடைந்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் சாண்டி உம்மன் உள்ளார்.

புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் இறக்கும் வரை தொடர்ச்சியாக 53 ஆண்டுகள் உம்மன் சாண்டி எம்.எல்.ஏ ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com