இந்தியா
தெலங்கானா விழாவை பிரதிபலித்த புர்ஜ் கலிபா கட்டடம்
தெலங்கானா விழாவை பிரதிபலித்த புர்ஜ் கலிபா கட்டடம்
தெலங்கானாவின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் மலர்கள் திருவிழாவை முன்னிட்டு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டது.
தெலங்கானா ஜாக்ருதி என்ற பெயரிலான அந்த மாநிலத்தின் கலாசார மற்றும் சுற்றுலா அமைப்பின் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதாவின் முயற்சியில், புர்ஜ் கலிபாவில் தெலங்கானா விழாவுக்கான வண்ண விளக்கு ஜொலிக்கச் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்: வீட்டுப்பாடம், டியூசனுக்கு தடை: புதிய சட்டம் இயற்றும் சீனா