\
BJP’s CM Face Row: Keshav Maurya Backs Lotus Ahead of UP Elections
கேசவ் பிரசாத் - யோகி ஆதித்யநாத்Pt web

உ.பி. | பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்? துணை முதல்வர் கொடுத்த விளக்கம்!!

உத்தரப் பிரதேசத்தில் 2027-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டு முறை பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் முதல்வராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்தச்சூழலில் தான், மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையில், மீண்டும் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்ய நாத்தே இருப்பாரா? அல்லது வேறு யாரேனும் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

AI

இது குறித்து உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யாவிடம் கேள்வி எழுப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்துள்ள அவர், ”பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரைதான் கட்சியின் முகம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்படும். அப்போது கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். தற்போது யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கிறார். ஆனால், அடுத்த தேர்தலுக்குப் பிறகு அவரே மீண்டும் முதலமைச்சராவாரா? அல்லது வேறு ஒருவர் அந்தப் பொறுப்புக்கு வருவாரா? என்பதைத் தன்னால் தீர்மானிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், யோகிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்திகள் பரவி வருவதாகவும் அது உண்மையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, மௌர்யாவின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள யோகி ஆதித்யநாத், பாஜகவில் அனைவரும் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என்றும், தாமரைதான் தங்களுக்கு எல்லாமே என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் முகம் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் சூசகமாகக் கூறியுள்ளார்.

இந்தச்சூழலில் தான், 2027 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்குள் முதல்வர் வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் கவனம் பெற்றுள்ளன.

BJP’s CM Face Row: Keshav Maurya Backs Lotus Ahead of UP Elections
இந்திரா, ராஜீவ் படுகொ*கள்: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஓர் பார்வை!!