‘நேற்று ராஜினாமா செய்த முதல்வர்’ முதல் ‘Ex முதல்வரின் வாரிசு’ வரை.. 2வது பட்டியலை வெளியிட்ட பாஜக!

பாஜக இன்று (மார்ச் 13) இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 72 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மனோகர் லால் கட்டார், ராகவேந்திரா
மனோகர் லால் கட்டார், ராகவேந்திராtwitter

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த மார்ச் 2ஆம் தேதி வெளியிட்டது. அதில், பிரதமர் மோடி மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலும், மத்திய உள்துறை அமைச்சர் குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஜக இன்று (மார்ச் 13) இரண்டாவதுகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 72 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நேற்று ஹரியானாவில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மனோகர் லால் கட்டார், கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார். அதுபோல், கர்நாடக மாநிலம் ஹவேரி தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை களமிறக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர்களான பிரகலாத் ஜோஷி கர்நாடகாவின் தர்வாட் தொகுதியிலும், நிதின் கட்கரி மகாராஷ்டிரா நாக்பூர் தொகுதியிலும், அனுராக் சிங் தாக்கூர் இமாச்சலில் உள்ள ஹமீர்புர் தொகுதியிலும், பியூஷ் கோயல் மகாராஷ்டிராவின் மும்பை வடக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிக்க: பெரும்பான்மையை நிரூபித்த அரசு; ஆனாலும் சிக்கலில் புதிய முதல்வர்.. கலக்கத்தில் ஹரியானா பாஜக!

மனோகர் லால் கட்டார், ராகவேந்திரா
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்: 195 இடங்கள் வெளியீடு.. வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி

மேலும், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலும், பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கிலும் போட்டியிடுகின்றனர். இதில், கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இரு முன்னாள் முதல்வர்களின் வாரிசுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு, ஏற்கெனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளும், பிரபல நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் களமிறக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள 2வது கட்ட வேட்பாளர் பட்டியலிலும் தமிழக வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நடைபெற்று வரும் கூட்டணிப் பேச்சுவார்தைகளால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல்: முதல் 5 போட்டிகள்.. மும்பை அணியிலிருந்து விலகும் 3 முக்கிய வீரர்கள்.. இதுதான் காரணமா?

மனோகர் லால் கட்டார், ராகவேந்திரா
39 காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மீண்டும் வயநாட்டில் ராகுல்.. ஷிமோகாவில் சிவராஜ் குமார் மனைவி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com