பாஜக வேட்பாளர்கள் பட்டியல்: 195 இடங்கள் வெளியீடு.. வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி

மத்தியில் ஆளும் பாஜக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ளது.
அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடிட்விட்டர்

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் எல்லாக் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து தொகுதிகளைப் பிரித்து வருகின்றன. இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2 நாட்களாக பாஜக தலைவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியானது.

அந்த வகையில், 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடப்பட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 47 இளைஞர்களுக்கும், 28 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலும், மத்திய உள்துறை அமைச்சர் குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!

உத்தரப் பிரதேசம் 51

மேற்கு வங்காளம் 20

மத்திய பிரதேசம் 24

குஜராத் 15

ராஜஸ்தான் 15

கேரளா 12

தெலுங்கானா 9 இடங்கள்

அசாம் 11

ஜார்கண்ட் 11

சத்தீஸ்கர் 11

டெல்லி 5

ஜம்மு காஷ்மீர் 2

உத்தரகண்ட் 3

அருணாச்சல பிரதேசம் 2

கோவா 1

திரிபுரா 1

அந்தமான் நிக்கோபார் 1

டாமன் மற்றும் டையூ 1

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com