அம்மாவுக்கு மீண்டும் சீட்... மகனுக்கு NO.. கழட்டி விடப்பட்ட வருண் காந்தி.. சுயேட்சையாக போட்டி?

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த சிட்டிங் எம்பியான வருண் காந்திக்கு, மீண்டும் அக்கட்சி சீட் வழங்காதது பேசுபொருளாகி உள்ளது.
வருண் காந்தி
வருண் காந்திட்விட்டர்

வருண் காந்திக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை!

நாடு ஜனநாய பெருவிழாவை எதிர்கொண்டு வருகிறது. இதனால், தேர்தல் பணிகள் ஜெட் வேகம் பிடித்து வருகின்றன. தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அங்கு அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் பணிகள் சூடுபிடித்து வருகின்றன. அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்திக்கு மீண்டும் சீட் வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது.

இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் காந்தி - மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அரசியலில் களமிறக்கப்பட்டவர். பாஜகவுக்கு ஐக்கியமான அவர் கடந்த 2014இல் சுல்தான்பூர் தொகுதியில் இருந்தும் 2019இல் பிலிபித் தொகுதியில் இருந்தும் மக்களவைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிலிபித் தொகுதியின் சிட்டிங் எம்பியான இவர், தற்போது அதே தொகுதியைக் கேட்டு தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த முறை பிலிபித் தொகுதி அவருக்கு அறிவிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக கடந்த 2021ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய ஜிதின் பிரசாதாவுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மக்களவை தேர்தல்| அறிவிப்பு..வாபஸ்..ரிப்பீட்டு! அடுத்தடுத்து விலகும் வேட்பாளர்கள்; கலக்கத்தில் பாஜக?

வருண் காந்தி
பா.ஜ.க தலைமையை எதிர்க்க தயாராகும் வருண்காந்தி - கட்சியில் தொடர்ந்து நீடிப்பாரா?

வருண்காந்திக்கு சீட் வழங்கப்படாததற்கு என்ன காரணம்?

முதற்கட்டமாக அம்மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பார்த்தால், நாளையுடப் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. ஆக, ஏற்கெனவே 55 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துவிட்டதால், இனி வருண் காந்திக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அவருடைய தாயாரான மேனகா காந்திக்கு மீண்டும் சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வருண் காந்திக்கு இந்த முறை சீட் ஒதுக்கப்படாததற்கு அவர், கடந்த முதல்வர் யோகி ஆதித்ய நாத்தையும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இதனால் அதிருப்தியில் இருந்த வருண் காந்தி, காங்கிரஸில் சேருவார் எனத் தகவல்கள் கசிந்தன. ஆனால், ராகுல் காந்தியோ, ‘வருணின் கொள்கைகள் வேறு’ எனச் சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் அப்போதே அவருக்கு காங்கிரஸின் கதவுகள் அடைக்கப்பட்டதால், தற்போது சமாஜ்வாடியே ஆதரவுக் கரம் நீட்ட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது எதுவும் இன்னும் உறுதியாகவில்லை. அதுபோல் பாஜகவும் அவரது வாய்ப்பைப் பறிக்கவில்லை எனக் கூறியிருக்கிறது. ஒருவேளை, எஞ்சியுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்போது மீண்டும் வருண் காந்திக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதேநேரத்தில், அமேதியில் வருண் சுயேச்சையாக போட்டியிடுவார் எனவும் அவருக்கு சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆதரவளிக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதற்காக, அந்தத் தொகுதியில் அக்கட்சிகள் வேட்பாளரை மாற்றம்கூடச் செய்யலாம் எனச் செய்திகள் கசிகின்றன.

இதையும் படிக்க: மஹுவாவை சாய்க்க பாஜக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்.. களமிறக்கப்பட்ட ராஜமாதா.. யார் இந்த அம்ரிதா ராய்?

வருண் காந்தி
"யாருடைய ஆத்மாவையும் உலுக்கும் லக்கிம்பூர் வீடியோ " - பாஜக எம்.பி வருண்காந்தி ட்வீட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com