அநாகரீகமான பேச்சு: வருத்தம் தெரிவித்த பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி.. நடந்தது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலியை, தவறான முறையில் பேசியதற்காக தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரி
குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரிபுதிய தலைமுறை

கடந்த செப். 21ஆம் தேதி புதிய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நடைபெற்ற சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.கவின் தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, மோடியைப் புகழ்ந்து பேசினார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி குறுக்கிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் பிதூரி, குன்வர் டேனிஷ் அலியைப் பார்த்து, அவருடைய மதத்தைக் குறிப்பிட்டும், கேட்கவே முடியாத அளவிற்கு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து இதே வார்த்தையை அவர் பயன்படுத்தி பேசியது இணையதளங்களில் வைரலாகியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ரமேஷ் பிதூரியிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரத்தில், வெறுப்புணர்வை அவையில் வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். மேலும், ரமேஷ் பிதூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினர். தவிர, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடமும் இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரி
தரக்குறைவாக பேசிய பாஜக எம்.பி.: யார் இந்த ரமேஷ் பிதூரி? இதற்குமுன் அவர் பேசிய சர்ச்சை பேச்சுகள்!

இந்த நிலையில், குன்வர் டேனிஷ் அலியை தவறான முறையில் பேசியதற்காக தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, இன்று (டிச.7) வருத்தம் தெரிவித்துள்ளார். ரமேஷ் பிதூரி வருத்தம் தெரிவித்ததால், சிறப்புரிமைக் குழு இந்த விஷயத்தை முடித்து, அதன் அறிக்கையை சபாநாயகருக்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com