டெல்லி | ஜெ.பி. நட்டா மனைவியின் கார் திருட்டு!

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் திருடு போய் இருப்பதாக டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பி. நட்டா
ஜெ.பி. நட்டாமுகநூல்

தென்கிழக்கு டெல்லியின் கோவிந்தபுரியில் கார் சர்வீஸ் கடை ஒன்றில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் மனைவி தன் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை சர்வீஸ் செய்வதற்காக விட்டுள்ளார். கடந்த மார்ச் 19 ஆம் தேதி அவர் விட்டு சென்ற காரை திரும்பி எடுப்பதற்காக அவர்களின் ஓட்டுநர் ஜோகிந்தர் கார் ஷெட்டுக்கு சென்றுள்ளார்.

FIR
FIR

அங்கு காரை எடுத்துவிட்ட டிரைவர், தனது வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் வெளியில் காரை நிறுத்திவிட்டு ஜோகிந்தர் சென்றதாக தெரிகிறது. அவர் திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தி இருந்த இடத்தில் கார் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் காரை தேடியுள்ளார் அவர். கிடைக்காததால் கார் திருடு போனது உறுதியானது.2

ஜெ.பி. நட்டா
மக்களவை தேர்தல் 2024 | கங்கணா ரணாவத் To அருண் கோவில்.. பாஜக அறிவித்த நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல்

இதையடுத்து அப்பகுதி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் சோதனை செய்த போது, திருடப்பட்ட கார் குருகிராம் நோக்கி சென்றது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இதை தவிர தற்போது வரை கார் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. காரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com