சாலையை கடந்தவர் மீது மோதிய பைக்.. தூக்கிவீசப்பட்ட நபர்; வெளியானது சிசிடிவி காட்சி!

கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
bike accident
bike accidentpt

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் சினிமாபரம்பு ஜங்ஷன் பகுதியில் எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், அந்த பகுதியில் கடைக்கு சென்ற நபர் ஒருவர், தேவையான பொருளை வாங்கிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சாலையை முன் பின் கவனிக்காமல், தான் வாங்கிய பொருளை கவனித்தபடியே சாலையை கடந்தார் அந்த நபர். இதற்கிடையே, பின்னால் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையை கடக்க முயன்ற அந்த நபர் மீது மோதி விபத்தில் சிக்கினர். இதில், நடந்து சென்ற நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவர் காயமடைந்தார்.

bike accident
EXCLUSIVE | தமிழ்நாடு அரசு அறிவிக்கும் திட்டங்கள் மத்திய அரசுடையதா? ஆதாரங்களுடன் மறுக்கும் திமுக!

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீஸாரின் விசாரணையில், தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த நபரின் பெயர் ராமச்சந்திரன் என்பதும், அவர் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டலில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையை கடக்கும்போது, அலட்சியமாக இருக்காமல் கவனமாக இருபுறமும் பார்த்துச் செல்வதன் மூலம் இதுபோன்ற விபத்திலிருந்து தப்பலான் என்கின்றனர் போலீஸார்.

bike accident
பிரதமர் மோடி உரை - “அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” - திருமாவளவன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com