\
Bihar: Floods in 15 districts
Bihar flood ANI

பிகார் | 15 மாவட்டங்களில் வெள்ளம்.. 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

கங்கை, கோசி நதிகள் கரைபுரண்டதால் 15 மாவட்டங்களில் 47 லட்சம் பேர் அவதி; தேசிய நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து முடக்கம்
Published on

பிகார் மாநிலத்தில் மழை சற்று தணிந்துள்ளதால் கங்கை நதியின் நீர்மட்டம் தற்போது மெதுவாகக் குறையத் தொடங்கியுள்ளபோதிலும், தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பிகாரில் கனமழை பெய்துவருகிறது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை வழக்கத்தைவிட 20 சதவீதம் கூடுதலாக 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Bihar Flood
Bihar FloodANI

இதனால் கங்கை, கோசி, கண்டக் உள்ளிட்ட நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பாகல்பூர் சுல்தான்கஞ்சில் கங்கை நதி அபாய அளவைவிட 2.12 மீட்டர் வரை அதிகரித்து பாய்ந்தது. பாகல்பூர்-பாட்னா இடையிலான NH80 தேசிய நெடுஞ்சாலை, 2 அடி ஆழத்துக்கு நீர் பாய்வதால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. முங்கேர்-மிர்சாசௌகி 4 வழிப் பாதையிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது.

பிகாரின் 15 மாவட்டங்களில் 47 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மூலம் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிஹாரில் தொடர் மழையால் வெள்ளம் நெடுஞ்சாலைகளிலும் புரண்டோடும் வெள்ளம் 15 மாவட்டங்களில் 47 லட்சம் பேர் பாதிப்பு பிஹாரில் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் தொடர் கனமழையால் கங்கை, கோசி நதிகளில் நீர்மட்டம் அதிகரித்தது.

Bihar: Floods in 15 districts
ரெட் அலர்ட்| 6 மாநிலங்களில் பொளக்கப்போகும் கனமழை! 40% நிலத்தை மிரட்டும் கருமேகங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com