கன்னட நடிகர் தர்ஷன் மீது கொண்ட அன்பினால், குழந்தைக்கு கைதி உடை அணிவித்த தம்பதி!

கன்னட நடிகர் தர்ஷன் மீது கொண்ட அன்பினால், தங்கள் குழந்தைக்கு கைதி உடை அணிவித்த தம்பதிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
கர்நாடகா
கர்நாடகாமுகநூல்

கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன், தனது தோழிக்கு ஆபாச செய்தி அனுப்பிய நபரை கூலிப்படை ஏவி தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கர்நாடகாவில் சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தங்களது பச்சிளம் குழந்தைக்கு கைதி உடை அணிவித்து, தம்பதியர் போட்டோ ஷூட் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் தர்ஷனுக்கு சொல்லப்பட்ட 6106 என்ற எண் கொண்ட உடையை குழந்தைக்கு அப்பெற்றோர் அணிவித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில், கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

கர்நாடகா
செருப்பால் அடித்த பவித்ரா.. கொலையை மறைக்க ரூ.40 லட்சம் கடன் வாங்கிய தர்ஷன்.. விசாரணையில் புது தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com