செருப்பால் அடித்த பவித்ரா.. கொலையை மறைக்க ரூ.40 லட்சம் கடன் வாங்கிய தர்ஷன்.. விசாரணையில் புது தகவல்!

நடிகர் தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி கொலை தொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில், பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தப்படி உள்ளன.
நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா
நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடாஎக்ஸ் தளம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜூலை 4 ஆம் தேதி வரைக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தப்படி உள்ளன.

மல்லிகார்ஜுன், தர்ஷன்
மல்லிகார்ஜுன், தர்ஷன்

இதற்கிடையே நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் கடந்த 2018 முதல் காணாமல் போயிருப்பதும் அவர் தர்ஷனிடம் ரூ.2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுபோல் தர்ஷனின் பண்ணை வீட்டின் மேலாளராக இருந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த வழக்குகளுடன் தற்போது நடைபெற்றிருக்கும் ரேணுகாசாமி கொலை வழக்கும் இணைந்திருப்பதால், நடிகர் தர்ஷனுக்கு புது தலைவலியைத் தந்துள்ளது.

இதையும் படிக்க: ரூ.125 கோடி முதலீடு! விராட் கோலியுடன் இணைந்த ஆதித்யா பிர்லா குழுமம்.. ஃபேஷன் சந்தையை பெருக்க திட்டம்

நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா
கர்நாடகா: கொலை வழக்கு.. ரூ.15 லட்சம் பேரம் பேசிய நடிகர் தர்ஷன்.. விசாரணையில் புதிய தகவல்!

எனினும், இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில், ரேணுகாசாமியை தர்ஷனின் கூட்டாளிகள் துன்புறுத்தும் காட்சியை அவரது மனைவி பவித்ரா கவுடா அங்கிருந்து சிறிது நேரம் ரசித்துப் பார்த்ததாகவும், அவரே செருப்பால் அடித்ததாகவும் புது தகவல் வெளியாகி உள்ளது.

ரேணுகாசாமி வெளியிட்ட பதிவுக்காக அவரை தண்டிக்கும்படி, பவித்ராவே தர்ஷனை தூண்டிவிட்டுள்ளார் என முன்னர் நடைபெற்ற விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த படுகொலை சம்பவத்தில் உண்மை வெளிவராமல் இருக்க நடிகர் தர்ஷன் ரூ.50 லட்சம் பணம் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக தர்ஷன், தனது நண்பர் ஒருவரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ரூ.37.4 லட்சம் தொகையை போலீசார் நடிகர் தர்ஷன் வீட்டில் மீட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தர்ஷனின் ரசிகர் சங்கத் தலைவரின் வீட்டில் இருந்தும் ரூ.4.5 லட்சம் மீட்கப்பட்டிருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: முகேஷ் அம்பானி நிறுவன பெயரில் போலி AI வீடியோ.. முதலீடு செய்து ரூ.7 லட்சத்தை இழந்த மும்பை மருத்துவர்!

நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா
கர்நாடகா கொலை வழக்கு| போலீஸிடம் ஆலோசனை கேட்ட நடிகர் தர்ஷன்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் புது தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com