Death Note|வீட்டில் குழந்தைகள் அதிகமாக கார்டூன் பாக்கறாங்களா? கவனிங்க பெற்றோர்களே..!
Death Note|பெங்களூருவில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன், உலகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் ஜப்பானிய அனிமேஷன் தொடரான 'டெத் நோட்' பார்த்துவிட்டு, அதன் தாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமான வித்தியாசம் புரியாத குழந்தைகளுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்பதற்கு ஒரு அபாய எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது. டெத் நோட்டுக்கு அடிமையான சிறுவன், அதன் தாக்கத்தால் நரகத்துக்கு செல்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பள்ளி மாணவன் ஒருவருக்கு நரகத்தின் புத்தகம் கிடைக்கவே, அதன் மூலம் அவன் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற சூப்பர் பவரை பெறுவதே அந்த கார்டூனின் கதை.. இந்நிலையில், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இந்தச்சம்பவம், டிஜிட்டல் உலகில் நம் குழந்தைகள் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள், எதில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. 'டெத்நோட்' போன்ற தொடர்கள், குழந்தைகள் மனதில் ஆழமான உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று மனநல நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
‘டெத் நோட்’ குறிப்பை உருவாக்கியது யார்?
‘டெத் நோட்’ ஓபாவால் எழுதப்பட்டு தகேஷி ஒபாடாவால் விளக்கப்பட்டது. இது முதன்முதலில் 2003 இல் ஜப்பானில் ஒரு காமிக் புத்தகமாக வெளியிடப்பட்டது, பின்னர் 2006 இல் ஒரு அனிமேஷன் தொடராக மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்து, இது ஒரு பெரிய உலகளாவிய ரசிகரைப் பெற்றுள்ளது. அனிமேஷன் தொடர் பல ஸ்ட்ரீமிங் தளங்களில் கிடைக்கிறது, மேலும் ஜப்பானில் நேரடி-ஆக்சன் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களாகவும், ஹாலிவுட் ரீமேக்காகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.