\
Bank Strike Postponed After Talks With Employees’ Unions
Bank serviceReuters

வங்கிகள் வேலை நிறுத்தம் இல்லை.. 3 நாட்களும் வழக்கம்போல் செயல்படும்!! காரணம் என்ன?

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறவிருந்த வங்கிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

வங்கி ஊழியர்களின் பணி-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்த வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இந்தச்சூழலில் தான், பழைய ஓய்வூதிய நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்; தற்போது, மாதத்தின் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.

கோப்புபடம்
கோப்புபடம் AI

மாத இறுதியில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததால், வாடிக்கையாளர்களின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்றைய தினம் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று வங்கிகள் செயல்பட்டன. இச்சூழலில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கக் கூட்டமைப்பும் கலந்து கொண்டன. நள்ளிரவு வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிற்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது குறித்து ஆராய உயர்மட்டக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றக் கோரிக்கைகளும் ஆராய்ந்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச்சூழலில் தான், 3 நாட்கள் நடைபெறவிருந்த வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படவுள்ளன.

Bank Strike Postponed After Talks With Employees’ Unions
இயர்பட்ஸ் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கும் ஆய்வுகள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com