வங்கதேசத்தின் ஆளில்லாத விமானங்கள்முகநூல்
இந்தியா
இந்திய எல்லை பகுதியில் நிறுத்தப்பட்ட வங்கதேசத்தின் ஆளில்லாத விமானங்கள்!
மேற்குவங்க மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ட்ரோன்களின் நடவடிக்கையை ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லையையொட்டிய பகுதிகளில் ஆளில்லாத விமானங்களை வங்கதேசம் நிறுத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், வங்கதேசத்தையொட்டிய இந்திய எல்லைகளில் பைரக்டர் TB2 ட்ரோன் வகை ஆளில்லாத விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அண்மையில் வங்கதேச அரசு வாங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ட்ரோன்களின் நடவடிக்கையை ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, விளக்கமளித்துள்ள வங்கதேசம், எல்லை கண்காணிப்பு மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க ட்ரோன்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.