பெங்களூரூ: புறாக்களுக்கு உணவு வைத்தால் ரூ.200 அபராதம்!

பெங்களுரில் புறாக்களுக்கு உணவு வைப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
கப்பன் பார்க் புறாக்கள்
கப்பன் பார்க் புறாக்கள்pt desk

பெங்களூரூவின் கப்பன் பார்க், ரேஸ்கோர்ஸ் சதுக்கம் உட்பட சில பகுதிகளில், சாலையோரம் புறாக்கள் கூட்டமாக இருக்கும். வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி, தங்களிடம் இருக்கும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்களை, புறாக்களுக்கு அளிப்பது வழக்கம். ஆனால், புறாக்களின் இறகுகளால், மனிதர்களுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சில மாதங்களுக்கு முன்பு, ஒரு தகவல் உலா வந்தது.

Pigeon
Pigeonpt desk

இதனால் புறாக்களுக்கு உணவு வைக்க, மாநகராட்சி தடை விதித்தது. ஆனாலும் ரேஸ்கோர்ஸ் சதுக்கத்தில், புறாக்கள் கூட்டமாக நிற்கும் இடத்தில், வாகன ஓட்டிகள் புறாக்களுக்கு, உணவு வைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த விவகாரம் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.

கப்பன் பார்க் புறாக்கள்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளியை கைது செய்தது NIA

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் சதுக்கத்தில், ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், புறாக்களுக்கு உணவு வைப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எழுதப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com