பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளியை கைது செய்தது NIA

பெங்களுரூ ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
NIA
NIAPT DESK

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த மார்ச் 1ம் தேதியன்று பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடித்தது. இதில் பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகளின் மையப்படத்தை கொண்டு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர். மேலும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் இருவரை பற்றிய விவரங்களை NIA தெரிவித்திருந்தது.

NIA
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே: குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்தனரா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாவீர் ஷபீர் உசேனை தேடி வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவரை டெல்லியில் நேற்று கைது செய்துள்ளனர்.

Rameshwaram cafe
Rameshwaram cafept desk

மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அப்துல் மதீன் தஹாவையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

முன்னதாக கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் என 18 இடங்களில் என்ஐஏ குழுக்கள் சோதனை செய்த பின்னர் முசாவீர் ஷபீர் உசேன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com