\
Marriage
MarriageFile image

சொந்தத்தில் திருமணம் தடையா? உச்சநீதிமன்றம் அதிரடி! எச்சரிக்கும் மருத்துவர்கள்

சொந்தத்தில் திருமணத்தால் குழந்தைக்கு மரபணு பாதிப்பு என இளம்பெண் மனு செய்துள்ளார். உறவுத் திருமணத்தை தடை செய்ய சட்டம் கொண்டு வர முடியுமா என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - வெற்றிச்செல்வி

சொந்தத்திலேயே திருமணம் செய்து கொள்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக் கூறி இளம் பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதைத் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ள உச்சநீதிமன்றம் முக்கிய முடிவை எடுத்திருக்கிறது.. விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

Supreme court
Supreme courtpt

பெங்களூருவைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் புகழ்பெற்ற சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். அவருடைய பெற்றோர் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், பிறவியிலேயே சில மரபணு பாதிப்புகளுடன் அவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் Photophobia எனப்படும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்களில் அதிக உணர்திறன் ஏற்படும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்தச் சம்பவம், இந்தியாவில் வழக்கமாக நடைபெறும் உறவுத் திருமணங்கள் குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இதை முன்வைத்து அந்த இளம் பெண் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குழந்தைகளுக்கு மரபணு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என மருத்துவ ரீதியாகத் தெரியும்போது, இதுபோன்ற திருமணங்களை சட்டம் ஏன் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

doctor
doctorAI

இதனால், பாரம்பரியம் இருக்கிறது என்பதற்காக குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்களை சட்டம் தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமா? என்பதுதான் இந்த மனுவின் முக்கிய கேள்வி.

இந்தியாவில் Hindu Marriage Act மற்றும் Special Marriage Act ஆகிய சட்டங்களில் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், குறிப்பிட்ட சமூகங்களின் பாரம்பரிய வழக்கங்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த விதிவிலக்குகளை நீக்க வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தப் பெண் கோரிக்கை வைத்துள்ளார்.

SAME BLOOD MARRIAGE
SAME BLOOD MARRIAGE AI IMAGE

இந்த விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தியாவிலேயே தென் மாநிலங்களில் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதாக தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் 11 சதவீத திருமணங்கள் நெருங்கிய உறவுகளுக்குள் நடைபெறுகின்றன. குறிப்பாக கேரளவைத் தவிர, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த மனுவை விசாரித்த சூர்ய காந்த் தலைமயிலான அமர்வு, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

உறவுத் திருமணங்களை தடை செய்ய தனியாக சட்டம் கொண்டுவர முடியுமா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

CJI Surya kant
CJI Surya kant web

இந்த விவகாரம் பொதுமக்களின் உடல்நலம், தனிநபர் சட்டங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் என பலவற்றுடன் தொடர்புடையது என்பதால், மத்திய அரசின் கருத்து மிகவும் முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்த பிறகு, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும், மருத்துவ ரீதியிலாகவும் பல முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நெருங்கிய உறவில் திருமணம் செய்யும் தம்பதிகளில் 25 சதவீதம் பேருக்கு, குழந்தை பிறக்கும்போதே பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Marriage
"எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் பசி அடங்காது" - பெரும் தொழிலதிபர்கள் மத்தியில் கொந்தளித்த பிரதமர்