\
pm modi
pm modipt web

"எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் பசி அடங்காது" - பெரும் தொழிலதிபர்கள் மத்தியில் கொந்தளித்த பிரதமர்

தொழில் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தவில்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் விமர்சனங்களை உறுதிப்படுத்தும் வகையில் தரவுகளும் உள்ளன.
Published on: 

தொழில் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தவில்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் விமர்சனங்களை உறுதிப்படுத்தும் வகையில் தரவுகளும் உள்ளன. இது குறித்து பார்க்கலாம்.

ஃபிக்கியின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி
ஃபிக்கியின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி@ficci_india

கடந்த வியாழக்கிழமை ஃபிக்கி (FICCI) எனப்படும் இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பெரும் தொழிலதிபர்கள், வணிகர்கள் மத்தியில் பேசிய பிரதமர் "உங்களுக்கு கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துவிட்டேன்... ஆனால் நீங்கள் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தினீர்களா... புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினீர்களா" என்று பிரதமர் நேரடியாகவே கேள்வி எழுப்பினார். உங்களுக்கு எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் பசி அடங்காது என்றும் பிரதமர் வெளிப்படையாகவே சாடினார். பிரதமரின் கடுமையான கேள்விகள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் புகாரைத் தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன.

பல்வேறு தொழில்நிறுவனங்களின் லாப வீதம் கணிசமாக உயர்ந்தும் அந்நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதும் ஊதியத்தை உயர்த்துவதும் குறைவாகவே இருந்ததாக அவை கூறுகின்றன. கடந்த 2025-26நிதியாண்டில் 4 ஆயிரத்து 46 தொழில் நிறுவனங்களின் லாபம் சராசரியாக 19% உயர்ந்துள்ளன. ஆனால் அவை ஊதியத்துக்கான நிதி ஒதுக்குவது 9% மட்டுமே அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் லாப வீதம் 32% அதிகரித்தும் ஊதியத்திற்கான நிதி 12.5% மட்டுமே உயர்ந்துள்ளது தரவுகளில் தெரியவருகிறது.

ஊதியத்திற்கான நிதி ஒதுக்கீடு சொற்பமாகவே உயர்ந்துள்ள நிலையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி கையிருப்பு கடந்த செப்டம்பர் நிலவரப்படி 12.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 5 ஆண்டுகளில் இல்லாத அதிகளவு தொகையாகும்.