இலக்கிய விழாவைத் தொடங்கிவைத்த மத்திய அமைச்சர்... உறுப்பினர் பதவி வேண்டாம் என்ற கேரள எழுத்தாளர்!

“கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்” என சுருக்கென பதில் அளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் ராதாகிருஷ்ணன். கேந்திர சாகித்ய அகாடமியில் தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் C ராதாகிருஷ்ணன்.
C ராதாகிருஷ்ணன்
C ராதாகிருஷ்ணன்pt web

1939 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி கேரளாவின் மலப்புரத்தில் உள்ள சாம்ரவட்டத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார். திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள சாகித்ய அகாடமி விருது, கேந்திர சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமியின் சிறந்த உறுப்பினர் அங்கீகாரம் சி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் கேந்திர அகாடமியில் தான் அங்கம் வகித்து வரும் பொறுப்பில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

C ராதாகிருஷ்ணன்
டெல்லி: “EVM, மேட்ச் ஃபிக்சிங் இல்லையெனில் பாஜக 180 இடங்களில் கூட வெல்லாது” - ராகுல் காந்தி

ராஜினாமா தொடர்பாக, கேந்திர சாகித்ய அகாடமியின் செயலாளர் ஸ்ரீனிவாசராவுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி (நேற்று) அவர் அனுப்பிய கடிதத்தில், "எந்தவித இலக்கிய அங்கீகாரமும் இல்லாத ஒரு மத்திய அமைச்சரை வைத்து இந்த ஆண்டு நிகழ்வை (இலக்கிய விழாவை) நடத்தியிருக்கிறார்கள். கேந்திர சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளிலும் அரசியல்வாதிகள் நிர்வாக ரீதியில் தலையிடுவதை நான் எதிர்க்கிறேன்" என கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஒரு எழுத்தாளர். அவர் இந்தியிலும், ராஜஸ்தானியிலும் படைப்புகள் இயற்றியுள்ளார் என கேந்திர அகாடமியின் தலைவர் மாதவ் கௌஷிக் விளக்கம் அளித்துள்ளார். இதற்கு, "கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்" என காட்டமாக பதில் அளித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com