Headlines|இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப் முதல் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வரை!
1. இந்தியாவுக்கு கூடுதல் வரிவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை... ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு, உக்ரைனில் உயிரிழப்பவர்கள் குறித்து கவலை இல்லை என்றும் விமர்சனம்...
2. அமெரிக்கா நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக மத்திய அரசு கண்டனம்...தேச நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அறிக்கை... குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு...
3. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரும் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்...
4. பீஹாரில் வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை... தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு...
5. தமிழகத்தின் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை... திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சியில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது...
6. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை... தேனி, தென்காசியில் மிக கனமழை பெய்யக்கூடுமென வானிலை மையம் கணிப்பு...
7. நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு... அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் சுற்றுலாத்தலங்களை மூட உத்தரவு...
8. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்.... முதலீடுகளை ஈர்க்கும் நுழைவுவாயிலாக தூத்துக்குடி திகழ்வதாக பெருமிதம்....
9. நெல்லையில் கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை... திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்குசீர்கெட்டு விட்டதாக விமர்சனம்...
10. மதுரை மேலூர் அருகே வினோத ஆடிப்படையல் திருவிழா... ஐந்துமுளி கோவிலில் 100 ஆடு, 1000 சேவல் பலியிட்டு வழிபாடு...
11. வேலூரைச் சேர்ந்த பெண் ராணுவ வீரர், நகைகள் திருடு போனதாக கண்ணீர் மல்க வீடியோ... புகாரளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு...
12. ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கு... ராகுல் காந்திக்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்...
13. இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாகை சூடியது இந்திய அணி...5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 2என்ற கணக்கில் சமன் செய்து அசத்தல்...