HEADLINES | அமித் ஷாவின் வருகை முதல் ராகுலின் குற்றச்சாட்டு வரை
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் அமெரிக்காவில் விசா வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு எழுந்துள்ள சிக்கல் வரை விவரிக்கிறது.
அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை மீறியவர்களை கண்டறியும் நோக்கத்தில், விசா வைத்திருக்கும் ஐந்தரை கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினரின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்துகொண்டு பாஜக ஓட்டுத் திருட்டில் ஈடுபட காங்கிரஸ் இனியும் அனுமதிக்காது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.
திமுக தலைவர்களை திட்டினால்தான் முதல்வராக முடியும் என விஜய் நினைப்பதாக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள தெருநாய்கள் தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
தம்பதியரை கைக்குழந்தையுடன் விடுதியில் அடைத்து வைத்து மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜேந்திர சோழனின் வாழ்க்கையை மையமாக வைத்து சென்னையை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ‘சன் ஆஃப் தஞ்சை' என்ற வீடியோ கேமின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
காஸா நகரைக் கைப்பற்ற புதிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்கிய இஸ்ரேல் ராணுவத்தால், மனிதாபிமான நெருக்கடி நிலையை மேலும் மோசமாக்கும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.