aug 19 2025 morning headlines news
ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், அன்புமணிஎக்ஸ் தளம்

HEADLINES|ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு முதல் அன்புமணி மீது நடவடிக்கை வரை

இன்றைய தலைப்புச் செய்தியானது, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முக்கியப் பேச்சுவார்த்தை முதல் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கூடும் ஒழுங்கு நடவடிக்கை குழு வரை விவரிக்கிறது.
Published on
Summary

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றதால், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வர போலீசார் தடை விதித்துள்ளனர். அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

  • வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • மதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் தவெக மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வர போலீசார் தடை விதித்துள்ளனர்.

  • பதினாறு குற்றச்சாட்டுகள் குறித்து அன்புமணி விளக்கம் அளிக்காவிட்டால், நடவடிக்கை எடுப்பது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

  • மதுரையில் மாநகராட்சி வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

  • குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், சி.பி.ராதாகிருஷ்ணுக்கு எதிராக களமிறங்கப் போவது யார் என i-n-d-i-a கூட்டணி கட்சி பிரதிநிதிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

aug 19 2025 morning headlines news
சி.பி.ராதாகிருஷ்ணன்எக்ஸ் தளம்
  • குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

  • வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்பது வாக்குத் திருட்டிற்கான புதிய ஆயுதம் என ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

  • தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வருவது குறித்து i-n-d-i-a கூட்டணி கட்சிகள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ரஷ்யா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.

  • உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில், 8வது வீரராகக் களமிறங்கிய ஷிவம் மாவி, 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

aug 19 2025 morning headlines news
சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. பாராட்டிய பிரதமர்.. பெருமிதம் கொண்ட தாயார்.. பாஜக வியூகம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com