HEADLINES | ட்ரம்ப்-புடின் சந்திப்பு முதல் ஸ்வேதா மேனன் வெற்றி வரை!
1. அலாஸ்காவில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்... உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக 3மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை...
2. போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புடின் பேட்டி... தற்போதைய பேச்சுவார்த்தை, உக்ரைனில் அமைதியை கொண்டுவரும் என நம்புவதாகவும் உறுதி...
3. புதின் உடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து... இன்றைய சந்திப்பு குறித்து நேட்டோ, ஜெலென்ஸ்கியை அழைத்து பேசுவேன் என்றும் உறுதி...
4. தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் யார்?...நாளை மோடி தலைமையில் நடக்கும் பாஜக ஆட்சி மன்ற குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு...
5. எதிரிகளின் தாக்குதலில் இருந்து நாட்டை காக்க மிஷன் சுதர்ஷன் சக்ரா திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு...
6. சமூக தளங்களில் இருந்து ஜெட் விமான இன்ஜின்கள் வரை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்றும் பேச்சு...பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை, வீண் பேச்சு-சீசன் 2 என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்... பழைய வாக்குறுதிகளை வார்த்தை மாறாமல் மீண்டும் அப்படியே தெரிவித்திருப்பதாக தாக்கு...
7. பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன்காலமானார்....சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது....
8. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர் இல.கணேசன் என பிரதமர் மோடி இரங்கல்.... தேசத்தை கட்டமைப்பதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தேசபக்தராக நினைவுகூரப்படுவார் என்றும் புகழஞ்சலி...
9. மறைந்த முதும்பெரும் அரசியல் தலைவர் இல.கணேசன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி....எல்லோரிடத்திலும் பாசத்தோடு பழகக்கூடியவர் என தலைவர்கள் புகழாரம்...இல.கணேசனின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக கண்ணதாசன் மைதானத்தில் வைக்க ஏற்பாடு.. .இன்று மாலை நடைபெறுகிறது இறுதிச்சடங்கு...
10. சென்னையில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மைப்பணியாளர்கள்....மேலும் சில கோரிக்கைகளும் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி....
11. முதல்வரை சந்தித்த தூய்மைப்பணியாளர்கள் ராம்கி நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள்...போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் இன்னும் பணிக்கு செல்லவில்லை என்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கபொதுச்செயலாளர் பேட்டி...
12. தாயுமானவர் திட்டத்தை விளம்பரத்துக்காக திமுக அரசு தொடங்கியுள்ளதாக பழனிசாமி விமர்சனம்... ஏற்கனவே 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நகரும் நியாய விலைக்கடைகள் திட்டம் தொடங்கப்பட்டதாக விளக்கம்...
13. பாமக நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் திடீரென சென்ற அன்புமணி....தாயாரின் பிறந்த நாளையொட்டி நேரில் ஆசி பெற்று, தந்தையுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்....
12. சுதந்திர தினத்தையொட்டி காரைக்காலில் தொடங்கிய புதுச்சேரிகலை விழா...பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்..
13. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையைஒட்டி களைகட்டிய அம்மன் கோயில்கள்... திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.,.. மடப்புரம் கோயிலில் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு...டோக்கன் இல்லாமலேயே சேலைகளை வாங்க முண்டியடித்த பெண்களால் பரபரப்பு..
14. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் மழைக்கு வாய்ப்பு... திருத்தணியில் கனமழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்...பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 320பேர் உயிரிழப்பு... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார்200 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்...
15. சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ்தொடரில் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரனேஷ் சாம்பியன்....மாஸ்டர் பிரிவில் வின்சென்ட் கேமர்பட்டம் வென்றார்....
16. மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஸ்வேதா மேனன் வெற்றி...முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றார்...