Top 10 political news today in tamilnadu
Top 10 political news today in tamilnaduPT web

தமிழ்நாடு அரசியல் களம் இன்று : கஸ்தூரியின் பாஜக இணைவு முதல் திமுக பற்றி திருமாவளவன் கருத்து வரை !

நடிகை கஸ்தூரியின் பாஜக இணைவு முதல் திமுக பற்றி திருமாவளவன் கருத்து வரை இன்றைய அரசியல் களத்தில் நிகழ்ந்த 10 முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்...
Published on

1) ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக , பாஜக பங்கேற்றுள்ளது !

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் கொடுத்துள்ள தேநீர் விருந்தை திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறகணித்துள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள்அ ஆளுநர் ஆர். என் ரவி-யின் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன.

ஆர். என் ரவி
ஆர். என் ரவிpt web

2) இந்தியா மற்ற நாடுகளுக்கு வாழிகாட்டியாக உள்ளது என மத்திய அரசுக்கு செங்கோட்டையன் புகழாரம் !

எல்லையோரங்களை இந்தியா பேணி காத்து அமைதி உருவாகிற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசு எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமை உணர்வோடு வாழவைக்கும் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்திய தேசம் என்பது உலகத்துக்கு வழிகாட்டியாக மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒருங்கிணைந்து மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக விளக்குகிறது என சுதந்திர தின விழாவில் கொடியேற்றி விட்டு செய்தியாளார்களிடம் பேசிய செங்கோட்டையன் இவ்வாறு மத்திய அரசை புகழ்ந்து பேசினார்.

செங்கோட்டையன், மோடி
செங்கோட்டையன், மோடிஎக்ஸ்

3) தமிழ்நாடு புறவழிச்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திமுக அரசை எதிர்த்து ஓபிஎஸ் அறிக்கை

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆண்டுக்காண்டு சுங்கக் கட்டணம் உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கியமான புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளதாக வந்துள்ள செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்pt web

4) நடிகை கஸ்தூரி இன்று பாஜக-வில் இணைந்தார் !

நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜகவில் இணைந்தனர். இது தொடர்பான படங்களை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

5)முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி !

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி எனக்கூறி தூய்மைப்பணியாளர்கள் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். இப்பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மேயர் பிரியா உணவு பரிமாறினார்

தூய்மைப் பணியாளர்கள் பேரணி
தூய்மைப் பணியாளர்கள் பேரணி எக்ஸ்

6) சனாதன சக்திகளுடன் தொடர்ந்து போராடும் ஓரே அம்பேத்கர் இயக்கம் என்றால், அது விசிக - திருமாவளவன்

மதுரையில் விசிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசிய திருமாவளவன், தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு மூன்றாவது நாளிலேயே சென்ற கட்சி வி.சி.க எனத் தெரிவித்தார். குப்பையாய் கிடக்கிற மக்களோடு குப்பையாக கிடந்தவன் என தம்மைக் குறித்து அவர் பேசினார். தூய்மை பணியாளர்களுக்காக முதன்முதலில் இயக்கம் தொடங்கிய கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் என்றும், இந்த வரலாறு தெரியாதவர்கள் தம்மை விமர்சிப்பதாகவும் திருமாவளவன் சாடினார். தன்னை தாத்தா என்று அழைக்கக்கூடிய தலைமுறை வந்துவிட்டாலும், தம்மீதான நம்பிக்கை உறுதிப்பட்டு நிற்பதாக திருமாவளவன் பேசினார்.

திருமா
திருமா முகநூல்

7) ஆளுநருக்கு தமிழர்களின் மீது என்ன அவ்வளவு வெறுப்பு? என எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார் !

கனிமொழி
கனிமொழிமுகநூல்

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என பேசியிருந்தார் இதற்கு எக்ஸ் தளத்தில் கருத்தைப் பதிவுசெயதுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அதில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் தான். பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

8) ஆளுநருமான இல.கணேசன் காலமானார் !

இல.கணேசன்
இல.கணேசன்pt web

சில தினங்களுக்கு முன்பு தி.நகர் இல்லத்தில் இருந்த போது ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி மயங்கி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த இல. கணேசன், அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது. தஞ்சையில் 1945ஆம் ஆண்டு பிறந்த இல.கணேசன், இளம் வயதில் ஆர். எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்துபணியாற்றியவர். திருமணம் செய்துகொள்ளாமல் முழு நேரம் இயக்கப்பணிகளை செய்து வந்த அவர், பின்னர்பாரதிய ஜனதாவில் இணைந்தார்.அக்கட்சியில் தேசிய செயலாளர், தேசியதுணைத் தலைவர், தமிழக மாநிலத்தலைவராக உள்ளிட்ட பொறுப்புகளைவகித்தார். 2009 மற்றும் 2014 ஆம்ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத்தேர்தல்களில் தென்சென்னைதொகுதியில் போட்டியிட்டுள்ளார்.மத்திய பிரதேசத்திலிருந்துமாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். 2021-ஆம் ஆண்டுமணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டு,பின்னர் 2023ஆம் ஆண்டு முதல்நாகலாந்து ஆளுநராக பணியாற்றிவந்தார்.

9) விளம்பரம் தேடும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிpt web

அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதிட்டங்களுக்கு புதுப்பெயர் சூட்டி தி.மு.க அரசு விளம்பரம் தேடிக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். 51 மாதங்களாக எந்த புதிய திட்டத்தையும் உருவாக்க முடியாத தி.மு.க அரசு, தேர்தல் நெருங்கியவுடன் அ.தி.மு.கவின் திட்டங்களை தூசு தட்டி புதிய பெயர் வைப்பதாக அவர் சாடியுள்ளார். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட நகரும் நியாய விலைக் கடைகள் திட்டத்துக்கு தாயுமானவர் என புதியபெயர் சூட்டப்பட்டுள்ளதாக பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சி முடியும்நேரத்தில், தேர்தலை மனதில் வைத்துமக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வெற்று விளம்பரங்களுக்காக செலவழிக்கப்படுவதாகவும் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

10) ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்pt desk

தமிழகத்தின் அரசு பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் வஞ்சிக்கக்கூடிய வார்த்தைகளால் பேச வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 79 வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கம் தலைமையகத்தில் துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேசியகொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், யாரோ சொல்லுகின்ற அறிக்கையை வைத்துக்கொண்டு தமிழகத்தை விமர்சிப்பதே ஆளுநரின் வேலையாக உள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com