aug 12 2025 morning headlines news
நிர்மலா சீதாராமன்எக்ஸ் தளம்

HEADLINES |பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு முதல் கனமழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது முதல் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வரை விவரிக்கிறது.
Published on
  • திருச்செந்தூர் முருகன் கோயிலில், சாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல கேரள பக்தர் குடும்பத்தினரிடம், கோயில் பணியாளர் ஒருவர் 44 ஆயிரம் ரூபாய் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.

  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

  • டெல்லியிலுள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க 8 வாரங்கள் கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தன்னை நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

  • மதுரையில் வரும் 21ஆம் தேதி நடைபெறும் விஜய் மாநாட்டிற்கு காவல் துறை அனுமதியளித்துள்ளதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

  • தமிழகத்தில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், சிபிசிஐடி டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • மும்பையை தொடர்ந்து டெல்லியிலும் டெஸ்லா கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்தியாவில் கார்கள் விற்பனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 2024-25 நிதியாண்டில் சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சாத்தியமான பங்களிப்பை இந்தியா வழங்கும் என ஜெலெனஸ்கியுடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

aug 12 2025 morning headlines news
“அரசின் இருவேறு நிலைபாடு, எங்களை குழப்புகிறது”-பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேறுமா?-ஓர் அலசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com