ரயில் பயணிகளே உஷார்.. லக்கேஜ் அதிகமானால் 6 மடங்கு அபராதம்!
தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நிலையில், பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என ரயில்வே எச்சரிக்கை.
ரயிலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் உடைமைகளைக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதன்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, இரண்டாம் வகுப்பில் 50 கிலோ, மூன்றாம் வகுப்பில் 40 கிலோ வரை உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளது.
இதற்கு மேல் உடைமைகளைக் கொண்டு சென்றால் உரிய கட்டணத்துடன் கூடுதலாக 6 மடங்கு அபராதமும் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் உடமைகளை அதிகளவில் எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

