Assam Elections: Tight Two-Way Contest Between BJP and Congress Alliances
அசாம்எக்ஸ் தளம்

அசாம் தேர்தல் | இருமுனைப் போட்டி.. பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் மோதல்!

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
Published on

அஸாம் தேர்தலில் எந்தெந்த கூட்டணிகள் மோதுகின்றன. எவ்வளவு இடங்களில் போட்டியிடுகின்றன என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

அஸாமில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான அஸாம் ஐக்கிய முன்னணியும் பிரதான போட்டியாளர்களாக உள்ளன. இதில் பாஜக கூட்டணியில் பாஜக 89 இடங்களிலும் அதன் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. அஸாம் கண பரிஷத் 26 இடங்களிலும் போடோலாந்து மக்கள் முன்னணி 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் கூட்டணியில் உள்ள பாஜக, அசாம் கணபரிஷத் இரண்டுமே போட்டியிடுகின்றன. மறு தரப்பில் காங்கிரஸ் அணியில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் போட்டியிடுகிறது.

bjp and congress
bjp and congressface book

ராய்ஜோர் தளம் 13, அசாம் ஜாதிய பரிஷத் 10, இதர கட்சிகள் தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன. ஒரு சுயேச்சை காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறார். 3 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இது தவிர ஏஐயுடிஎஃப் கட்சி 27 இடங்களில் போட்டியிடுகின்றது. இது பாஜக, காங்கிரசுக்கு அடுத்து இது 3ஆவது முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் 23, ஆம்ஆத்மி 20, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களில் போட்டியிடுகின்றன. முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவருமாக திகழக்கூடிய கவுரவ் கொகோய் ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸின் மற்றொரு முதல்வர் வேட்பாளராக கருதுப்படும் ரிபுன் போரா பர்சல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். அசாம் கணபரிஷத் கட்சியின் அதுல் போரா பொக்காகாட் தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் தேபபிரதா சைக்கியா 4ஆவது முறையாக நாசிரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Assam Elections: Tight Two-Way Contest Between BJP and Congress Alliances
முதல் இஸ்லாமிய பெண்.. இந்தியாவின் இளம் வயது முதல்வர்களை தந்த அசாம்.. அரசியல் பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com