assam assembly election 2026 updates
Model imagegoogle gemeni

முதல் இஸ்லாமிய பெண்.. இந்தியாவின் இளம் வயது முதல்வர்களை தந்த அசாம்.. அரசியல் பின்னணி என்ன?

சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள அஸாம் மாநிலத்தின் அரசியல் பின்னணியை சற்றே திரும்பிப்பார்ப்போம்.
Published on

2016இல் நடைபெற்ற தேர்தலில் அஸாமில் பாஜக கால்பதித்தது. 2021 தேர்தலிலும் பாஜவே வென்றது, தற்போது தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டும் நிலையில் 15ஆணடுகளுக்குப் பிறகு அரியணை ஏற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.

சுதந்திரத்திற்குப் பின் பிற இந்திய மாநிலங்களைப்போலவே அஸாமிலும் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. இங்கு 1952, 57, 62, 67, 72 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து வெற்றிபெற்றது. 1978இல் முதன்முதலாக அஸாமில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. நெருக்கடி நிலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளில் 2 முதல்வர்கள் பதவியேற்ற நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. 1980இல் காங்கிரஸ் கட்சியின் அன்வாரா தைமூர் முதல்வரானார். இந்தியாவில் முதல்வர் பதவியில் அமர்ந்த முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையையும் பெற்றார் இவர்.

assam
assamx page

ஆனால் இவரது ஆட்சியும் 200 நாட்களில் கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. 1985இல் நடைபெற்ற தேர்தலில் அசாம் கணபரிஷத் வெற்றிபெற்றது. 33 வயதான பிரஃபுல்ல குமார் மொகந்தா முதல்வர் ஆனார். இந்தியாவிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பிரஃபுல்ல குமார் மொகந்தாவின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. 2001இல் காங்கிரஸ் கட்சியின் தருண் கொகோய் அஸாம் முதல்வரானார். அடுத்த 15 ஆண்டுகளும் இவரே முதல்வராக நீடித்தார். அஸாமின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். இவரது மகன் கவுரவ் கொகோய்தான் அசாமில் தற்போது காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறரார். 2016இல் நடைபெற்ற தேர்தலில் அஸாமில் பாஜக கால்பதித்தது. 2021 தேர்தலிலும் பாஜவே வென்றது, தற்போது தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டும் நிலையில் 15ஆணடுகளுக்குப் பிறகு அரியணை ஏற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.

assam assembly election 2026 updates
அசாம் தேர்தல்.. வெள்ளமே வராத அசாம்? பாஜகவின் 31 அதிரடி அறிவிப்புகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com