assam CM Himanta Sarma vs congress chief Gaurav Gogoi
Himanta Biswa Sarma, Gaurav Gogoix page

பாகிஸ்தானுடன் தொடர்பு? அசாம் முதல்வர் குற்றச்சாட்டு.. கவுரவ் கொகோய் மறுப்பு!

அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கொகோய் மற்றும் அவரது ஆங்கிலேய மனைவிக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
Published on

அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கொகோய் மற்றும் அவரது ஆங்கிலேய மனைவிக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கொகோய் மற்றும் அவரது ஆங்கிலேய மனைவிக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. இதுபற்றி பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மா, கவுரவ் கொகோய் மற்றும்அவரது மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தானைc சேர்ந்த அலி தெளகீர் ஷேக்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். கோகோயின் மனைவி எலிசபெத், அலிதௌகீர் ஷேக்கிற்கு இந்திய உளவுத்துறை தொடர்பான தகவல்களை வழங்கியதாகவும் அசாம் முதல்வர் கூறியுள்ளார். கவுரவ் கொகோய் 2013இல் பாகிஸ்தான் சென்றபோது ஏதோ ஒருபயிற்சி பெற்றதாகவும் அசாம் முதல்வர் கூறியுள்ளார். அசாமில் தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவரான கவுரவ் கொகோய் மீது முதல்வர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

assam CM Himanta Sarma vs congress chief Gaurav Gogoi
Himanta Biswa Sarma, Gaurav Gogoix page

அதேநேரத்தில், தன் மீதும் தன் மனைவி மீதும் முதல்வர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை கவுரவ் கொகோய் மறுத்துள்ளார். இது மனம்போன போக்கில் கூறப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டு என்றும் மட்டமான மூன்றாந்தர திரைப்படத்திற்கு ஒப்பானது என்றும் கொகோய் கூறியுள்ளார். முதல்வரும் அவரது குடும்பத்தினரும் ஆக்கிரமித்துள்ள 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க தாங்கள் நடத்திய யாத்திரை வெற்றிபெற்றதால் அதை மறைக்க இதுபோன்ற பொய் குற்றச்சாட்டு கூறப்படுவதாக கவுரவ் கொகோய் மறுத்தார். அசாம் முன்னாள் முதல்வர் தருண் கொகொயின் மகனான கவுரவ் கொகோய், மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் உள்ளார். அசாம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராகவும் கருதப்படுகிறார்.

assam CM Himanta Sarma vs congress chief Gaurav Gogoi
அசாம் | ’மியா’ முஸ்லிம்களைத் தாக்கும் பாஜக.. முதல்வரின் பேச்சால் மாநிலத்தில் சலசலப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com