around 21pc MPs, MLAs and MLCs are from dynastic backgrounds ADR report
sonia, rahul, Supriya Sule, Sharad PawarPTI

இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்கள்.. முதலிடத்தில் காங்... ஆய்வில் தகவல்!

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்டமேலவை உறுப்பினர்களில் 21 விழுக்காட்டினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published on
Summary

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்டமேலவை உறுப்பினர்களில் 21 விழுக்காட்டினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்டமேலவை உறுப்பினர்களில் 21 விழுக்காட்டினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் என மொத்தம் 5,204 மக்கள் பிரதிநிதிகளில் 1,107 பேர் அதாவது, ஐந்தில் ஒரு பங்கினர் அரசியல் குடும்பப் பின்புலம் உடையவர்கள். மக்களவையில்தான் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

around 21pc MPs, MLAs and MLCs are from dynastic backgrounds ADR report
சோனியா, ராகுல், பிரியங்காஏ.என்.ஐ.

மக்களவை எம்பிக்களில் 31% அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மாநிலங்களவை எம்பிக்களில் 21%, மாநில சட்டமேலவை எம்ல்சிக்களில் 22% அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மாநில சட்டமன்றங்களின் எம்.எல்.ஏக்களில் 20% அரசியல் குடும்பங்களிருந்து வந்தவர்கள். தேசியக் கட்சிகளைச் சேர்ந்த 3,214 மக்கள் பிரதிநிதிகளில், 657 பேர் அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டுள்ளனர். இதில் 32% பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் உள்ளது. 17% பிரதிநிதிகளுடன் பாஜக அடுத்த இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் 11% எம்பி, எம்எல்ஏக்கள் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8% எம்பி, எம்.எல்.ஏக்கள் மட்டுமே அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

around 21pc MPs, MLAs and MLCs are from dynastic backgrounds ADR report
“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்

மாநிலக் கட்சிகளில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியில் 42% மக்கள் பிரதிநிதிகள் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள். 38% பிரதிநிதிகளுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் 36% பிரதிநிதிகளுடன்தெலுங்கு தேசம் கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. திமுகவில் 18% மக்கள் பிரதிநிதிகள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்களாக உள்ள நிலையில், அதிமுகவில் அது 4 விழுக்காடாக மட்டுமே உள்ளது. மாநில வாரியாகப் பார்த்தால் அரசியல் குடும்பப் பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள் விகிதத்தில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

around 21pc MPs, MLAs and MLCs are from dynastic backgrounds ADR report
உதயநிதி, ஸ்டாலின்ஏ.என்.ஐ.

255 மக்கள் பிரதிநிதிகளில் 86 பேர் அதாவது, 34 விழுக்காட்டினர் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மஹாராஷ்டிராவில் 403 மக்கள் பிரதிநிதிகளில் 32%, கர்நாடகாவில் 29%,பிஹாரில் 27%, உத்தரப் பிரதேசத்தில் 23% மக்கள் பிரதிநிதிகள் அரசியல் குடும்பப் பின்புலத்தை உடையவர்கள். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 539 பெண் பிரதிநிதிகளில் 47% பேர் அரசியல் குடும்பப் பின்புலம் கொண்டவர்கள். 4,665 ஆண் பிரதிநிதிகளில் 18% மட்டுமே குடும்ப அரசியல் பின்னணி கொண்டவர்கள். ஆண்களைவிடப் பெண்களிடையே குடும்ப அரசியல் பின்னணி இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க அறிக்கையின்படி, வேட்பாளர் தேர்வில் குடும்ப அரசியலின் ஆதிக்கம், அதிக தேர்தல் செலவுகள் மற்றும் கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லாதது போன்ற காரணிகளே அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கம் தலைதூக்கக் காரணமாக உள்ளன.

around 21pc MPs, MLAs and MLCs are from dynastic backgrounds ADR report
குடும்ப அரசியல் முக்கிய பிரச்னையில்லை: குமாரசாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com