applications welcome for central governments padma awards 2026
பத்ம விருதுகள்எக்ஸ் தளம்

2026 | பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. மத்திய அரசு அறிவிப்பு!

2026ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on

ஆண்டுதோறும் கலை, இலக்கியம், இசை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை கவுரவித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசுத் தினத்தன்று இவ்விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில், 2026ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://awards.gov.in இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் தேதி விண்ணப்பிக்க, பரிந்துரை செய்ய கடைசி நாளாகும்.

applications welcome for central governments padma awards 2026
பத்ம விருதுகள்எக்ஸ் தளம்

இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள். விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.1954ஆம் ஆண்டில் இருந்து பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

applications welcome for central governments padma awards 2026
பத்ம விருதுகள் அறிவிப்பு | மதுரை பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com