“அறிவிப்புகள் தவறாக இருக்கலாம்” எதிர்க்கட்சி எம்.பிகளின் குற்றச்சாட்டுக்கு ஆப்பிள் நிறுவனம் விளக்கம்

தங்கள் செல்போன்களை அரசு உளவு பார்க்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டிய எம்.பி.க்கள்
குற்றம் சாட்டிய எம்.பி.க்கள்pt web

எதிர்க்கட்சி தலைவர்களான சசி தரூர், சிவசேனா (உத்தவ் தாக்கரே)வைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, சமாஜ்வாதியைச் சேர்ந்த அகிலேஷ்யாதவ் மற்றும் ராகுல்காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் நான்கு நபர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இது போன்ற செய்திகள் ஒரே நேரத்தில் வந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். அரசுதான் அவர்களை ஒட்டுக்கேட்கிறது, வேவு பார்க்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சசி தரூர், மஹூவா மொய்த்ரா
சசி தரூர், மஹூவா மொய்த்ராpt web

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த் ராகுல் காந்தியும் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, “பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது. இவ்விவகாரத்தில் வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இது குறித்தான விளக்கமொன்றை அளித்துள்ளது. அதில், “ஆப்பிள் நிறுவனம் அச்சுறுத்தல் அறிவிப்புகளுக்கு (threat notifications), எந்த ஒரு குறிப்பிட்ட அரசு ஆதரவு தாக்குதல்களையும் (state sponsored attacker )காரணமாக குறிப்பிடவில்லை.

அரசு ஆதரவு தாக்குதல் (SSA) நடத்துபவர்கள் நல்ல நிதியுதவியுடன் கூடிய அதிநவீனமயமானவர்கள். அவர்களின் தாக்குதல்கள் காலப்போக்கில் மாற்றம் அடைகின்றன. இத்தகைய தாக்குதலை அடையாளம் காண்பது என்பது ஒரு முழுமையற்ற அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்களை (threat intelligence signals) நம்பியுள்ளது. சில ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகளானது தவறானதாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது. இல்லையெனில் அதுபோன்ற அச்சுறுத்தல்கள் கண்டறியப்படாமலும் இருக்கலாம்.

அச்சுறுத்தல் அறிவிப்புகளை வழங்குவதற்கான காரணங்களை எங்களால் வெளியிட முடியாது. ஏனெனில் அவ்வாறு காரணங்களை வழங்குவது அரசு ஆதரவு தாக்குதலை நடத்துபவர்கள் தாங்கள் கண்டறியப்படுதலை தவிப்பதற்கு தங்களுடைய நடத்தையை மாற்றியமைப்பதற்கு உதவக்கூடும்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com