“கேப்டனின் ஆன்மா தமிழக அரசியலை வழிநடத்தும்” - அண்ணாமலை

“விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர். ஏழைகளின் பங்காளராக இருந்து, வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று அனைவருக்கும் காட்டிவிட்டு, அவருடைய ஆன்மா இளைப்பாற சென்றுவிட்டது” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அண்ணாமலை
அண்ணாமலைPT

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது, “விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர். ஏழைகளின் பங்காளராக இருந்து, வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று அனைவருக்கும் காட்டிவிட்டு, அவருடைய ஆன்மா இளைப்பாற சென்றுவிட்டது.

அவர் நம்முடன் இல்லை என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது. தென் இந்திய சினிமாவில் கோலூச்சி, அரசியல் உலகத்தில் இரு ஆளுமைகளுடன் போட்டியிட்டு மக்களின் அன்பை பெற்று, அற்புதமான அரசியல் தலைவராக இருந்து, தமிழகத்தில் புதிய அரசியலுக்கு வழிவகுத்து, பிரதமரின் அன்பை பெற்றவர் விஜயகாந்த்” என்று புகழ்ந்தார்.

அண்ணாமலை
விஜயகாந்த் மறைவு: ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com