Anil Ambani’s Comeback: A New Chapter Begins
அனில் அம்பானிpt web

ஸ்டார் தொழிலதிபராக கோலோச்சி வந்த அனில் அம்பானி.. சாம்ராஜ்யம் சரிந்த கதை தெரியுமா..?

ஸ்டார் தொழிலதிபராக கோலோச்சி வந்தவரின் சாம்ராஜ்யம் சரிந்த கதை தெரியுமா..? சில தசாப்தங்களில் நிகழ்ந்ததை சில நிமிடங்களில் பார்க்கலாம்...
Published on

ஒரு தாய் வயிற்றில் பிறந்த மகன்கள்... ஒருவருக்கு தொட்டதெல்லாம் லாபம்... மற்றொருவருக்கு போராடினாலும் நஷ்டம்.. யார் அவர்கள்.. திருபாய் அம்பானியின் மகன்கள் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் தான்.. உலகறிந்த தொழிலதிபர்கள்.  2002ஆம் ஆண்டு திருபாய் அம்பானி இறந்துவிடவே.. தாய் கோகிலாபென் 2005இல் சொத்துகளை சகோதரர்களுக்கு பிரித்து கொடுத்தார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முகேஷ் அம்பானியின் வசம் வந்தது. அன்னையின் செல்லப்பிள்ளையான அனில் அம்பானிக்கு எதிர்கால வர்த்தகமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கப்பட்டன.

தந்தை திருபாய் அம்பானியுடம் அம்பானி சகோதரர்கள்
தந்தை திருபாய் அம்பானியுடம் அம்பானி சகோதரர்கள்

2 தசாப்தங்களுக்கு முன் ஸ்டார் தொழிலதிபராக வலம் வந்த அனில் அம்பானி, 2006ஆம் ஆண்டு ஆர்-காம், ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனங்களை மேம்படுத்த இந்திய பங்குச் சந்தைகளில் களமிறங்கினார். சாதாரண மக்கள் வேடிக்கைமட்டுமே பார்க்க முடிந்த மொபைல் ஃபோன்களை 2007ஆம் ஆண்டு வெறும் 999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தினார். 2013ல் ஆர்காம் நிறுவனம் 500ரூபாய்க்கு இணையதள வசதியுடன் மொபைல் ஃபோன்களை அறிமுகப்படுத்தியது. இந்தசெயல் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியது என்றுசொல்லலாம்.

Anil Ambani’s Comeback: A New Chapter Begins
சீனா கட்டும் பெரிய அணை.. இந்தியாவிற்கான 85% நீரின் அளவு குறைய வாய்ப்பு.. ஆய்வில் பகீர் தகவல்!

2008ஆம் ஆண்டில் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏறத்தாழ தலா 3லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய். ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, அப்போது உலகின் 5ஆவது பெரிய பணக்காரராக அண்ணனும் 6ஆவது மிகப்பெரிய பணக்காரராக தம்பியும் இருந்தனர். ஆனால், தற்போது அனில் அம்பானியின் சொத்து மதிப்புவெறும் 8 ஆயிரத்து 300 கோடி. முகேஷ் அம்பானியின்  சொத்துமதிப்பு 9 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்.

அனில் அம்பானி
அனில் அம்பானிpt web

இடைப்பட்ட 20 ஆண்டுகளில் அனில் அம்பானிக்கு நிகழ்ந்தது என்ன... ஆர்காம் தன்னுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் எரிக்சன் நிறுவனம் நீதிமன்றம் வரை சென்றது. 3 சீன வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்த நிலையில், அந்த வங்கிகளுக்கு பணத்தை செலுத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அனில் அம்பானி குழுமநிறுவனங்கள் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் முறைகேடு செய்ததாக சமீபத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜரானது... இப்படி அவரின் நிறுவனங்களுக்கு அடிமேல் அடிவிழுந்தது சரிவிற்கு காரணமானது.

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தாலும் துவண்டு போகாமல் ரிலையன்ஸ் DEFENCE நிறுவனத்தால் துளிர்த்து வருகிறார் இந்த ஸ்டார் தொழிலதிபர்.

Anil Ambani’s Comeback: A New Chapter Begins
கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் 30 நாட்களில் பதவி நீக்க மசோதா.. A to Z ஓர் அலசல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com