ஆந்திரா|லேட் ஆக வந்த SI-ஐ அலறவிட்ட அமைச்சரின் மனைவி.. வைரலான வீடியோ; டோஸ்விட்ட முதல்வர்! #ViralVideo

ஆந்திரப் பிரதேச அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி, ​​தன்னைக் காத்திருக்க வைத்த போலீஸ் அதிகாரியை கண்டித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹரிதா ரெட்டி
ஹரிதா ரெட்டி எக்ஸ் தளம்

18வது நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், அவருடைய அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம்பிரசாத் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இவருடைய மனைவி ஹரிதா ரெட்டி. இவர் எம்.எல்.ஏவும் இல்லை. கட்சியிலும் பதவியில் இல்லை எனக் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுமுகநூல்

இந்த நிலையில் இவருடைய கணவரின் தொகுதியான ராயச்சோட்டியில் கடந்த ஜூலை 1ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஹரிதா ரெட்டி சென்றுள்ளார். அப்போது அவரின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் சிலர் சென்றுள்ளனர். அந்தப் பணியில் உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு என்பவரின் பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மியான்மர்| ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கிய முதலாளி.. கடைகளை மூடி கைதுசெய்த ராணுவம்!

ஹரிதா ரெட்டி
ஆந்திரா| அன்று வீடு..இன்று அலுவலகம்; ஜெகன் கட்டடம் இடிப்பு..பழிக்குப்பழி வாங்கும் சந்திரபாபு நாயுடு!

ஆனால், சம்பவத்தன்று ரமேஷ் பாபு சற்றுத் தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஹரிதா ரெட்டி கோபமானதுடன், அங்கு நின்றிருந்த பலரின் முன்னிலையில் வெளுத்து வாங்கியுள்ளார். ”இன்னும் உங்களுக்கு பொழுது விடியவில்லையா? என்ன கான்பஃரன்ஸ் உனக்கு இருந்தது? திருமண விழாவுக்கு வந்தியா, பணிக்கு வந்தியா? உனக்காக அரை மணிநேரம் வரை காத்திருக்கிறேன். உனக்கு சம்பளம் யார் தருகிறார்கள்? அரசா அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியா” என சகட்டுமேனிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ரமேஷ் பாபு செய்வதறியாது நின்றதுடன் மூன்று முறை மன்னிப்பு கேட்டுள்ளார். இறுதியில் அவருக்கு சல்யூட் அடித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், ஆந்திர அரசியலிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து எஸ்.ஐ. ரமேஷ் பாபு, ”எனக்குத் தெரிந்தவுடன் நான் அங்கு விரைந்தேன். ஆனால், அவர் கோபப்பட்டார். நடந்தது குறித்து அவரிடம் விளக்கினேன். பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். இது மிகவும் தீவிரமான விஷயமல்ல. என்றாலும் இது வீடியோ வைரலாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அடுத்த டார்கெட் ரிஷப்.. சாம்சனுக்குதான் வாய்ப்பு.. தீவிர முடிவில் கவுதம் கம்பீர்.. காரணம் இதுதான்!

ஹரிதா ரெட்டி
ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ”அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமாம். அமைச்சர் மண்டபள்ளி ராம்பிரசாத் ரெட்டின் மனைவி ராயச்சோட காவல் நிலையத்தை சேர்ந்தவர்களை தனக்கு துணையாக வரும்படி கூறினார். போலீசாரை அடிமைபோல் எச்சரிக்கை செய்துள்ளார். பயமடைந்த போலீஸ் ஆதரவற்ற நிலையில் அவருக்கு சல்யூட் அடித்தனர்'' என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "தெலுங்கு தேசம் அரசாங்கத்தை மோசமாக பிரதிபலிக்கும் எதையும் செய்ய வேண்டாம்; இதுபோன்ற சம்பவங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்" என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் டி.நரேந்திரா எச்சரித்திருந்தார். இதையடுத்து, மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி தனது மனைவியின் இந்தச் செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்| ஜோ பைடன் மாற்றமா? கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்!

ஹரிதா ரெட்டி
ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. இடித்த கார்ப்பரேஷன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com