சிலிண்டர் வெடித்த திருமண நிகழ்ச்சி file image
இந்தியா
திருமண நிகழ்வில் ஸ்பிரே சிலிண்டர் வெடித்து 11 வயது சிறுமி உயிரிழப்பு; சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்!
ஆந்திராவில் திருமண நிகழ்வின் போது சிலிண்டர் வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், புத்தூர் அருகே திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது மணமக்களுக்கு போட்டோ ஷூட் நடத்த ஸ்பிரே அடித்த போது ஸ்பிரே சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் மணமேடையின் வலது புறம் நாற்காலியில் அமர்ந்திருந்த சாந்தினி என்ற 11 வயது சிறுமி மீது அடு பட்டுள்ளது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏறப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி
அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்பிரே சிலிண்டர் வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.