மேகாலயா கொலையைத் தொடர்ந்து ஆந்திராவில் ஒரே மாதத்தில் கணவர் மரணம்.. குற்றஞ்சாட்டப்பட்ட புதுப் பெண்!
மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஜார்க்கண்டிலும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆந்திராவிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்தவர், தேஜேஸ்வர். இவர் தனியார் நில அளவையாளராகவும் நடன ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த மே மாதம் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், தேஜேஸ்வர் கடந்த ஜூன் 17ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவருடைய உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேஜேஸ்வர் போலீஸ்சில் புகார் அளித்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யா திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததாகவும், அவர்தான் தேஜேஸ்வரின் கொலைக்குத் திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, போலீசார் ஐஸ்வர்யாவையும் அவரது தாயார் சுஜாதாவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போதைய விசாரணையில், ஐஸ்வர்யா ஒரு வங்கி ஊழியருடன் காதல் கொண்டிருந்தார். அதேநேரத்தில், அவர் தேஜேஸ்வரையும் காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டனர். பிப்ரவரியில் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவர் திரும்பி வந்து மீண்டும் தேஜேஸ்வரை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொண்டார்.
தேஜேஸ்வரின் குடும்ப உறுப்பினர்கள், ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர். ஆனால், ஐஸ்வர்யா தேஜேஸ்வரைத் திருமணம் செய்யப் பிடிவாதமாக இருந்துள்ளார். தற்போது ஐஸ்வர்யாவும் அவரது தாயாரும் தேஜேஸ்வரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக அவர்களது குடும்பத்தினர் இப்போது சந்தேகிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.