வெறும் 5 நாட்களில் ரூ.579 கோடி.. கிடுகிடுவென உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்துகள்!

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரியின் நிகர சொத்துமதிப்பு, ஐந்து நாட்களில் ரூ.579 கோடி அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு, நாரா புவனேஸ்வரி
சந்திரபாபு நாயுடு, நாரா புவனேஸ்வரிஎக்ஸ் தளம்

18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆரம்பித்து ஜூன் 1வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இத்துடன் சிக்கிம், அருணாச்சல், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, ஜூன் 12ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், அவரது மனைவி நாரா புவனேஸ்வரியின் நிகர சொத்துமதிப்பு, ஐந்தே நாட்களில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்தாலும், நாரா புவனேஸ்வரியின் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. அவர், இந்நிறுவனத்தில் 24 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளார். இதன்மூலம் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 5 நாட்களில் ரூ.579 கோடியாக உயர்ந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தெலுங்கு தேசம் ஆட்சியை நிச்சயம் பிடிக்கும் என்று பறைசாற்றியது இதற்கு முக்கிய காரணம்.

கடந்த மே 31ஆம் தேதி ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 402.90 ஆக இருந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, இன்று பங்கு விலை ரூ.660 வரை உயர்ந்தது.

இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!

சந்திரபாபு நாயுடு, நாரா புவனேஸ்வரி
சந்திரபாபு நாயுடு சொன்ன ஒற்றை வார்த்தை.. கிடுகிடுவென உயர்ந்த பங்குச்சந்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com