மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர்pt

’இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல’ - நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர்!

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டாக்கும் வெளிநாட்டினரை தடுத்து நிறுத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. - மத்திய அமைச்சர்
Published on

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குடியுரிமை மற்றும் வெளிநாட்டினருக்கான மசோதா 2025 பற்றிய விவாதத்தில் இன்று கலந்து கொண்டு பேசினார்.

இந்த மசோதாவானது, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று கூறினார். நிறைய மற்றும் ஒரேபோன்று காணப்படும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அவர் பேசினார்.

மேலும், பேசிய அவர், “ இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டாக்கும் வெளிநாட்டினரை தடுத்து நிறுத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா, கல்வி, சுகாதாரம் மற்றும் வணிகத்திற்காக இந்தியா வருபவர்களை வரவேற்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் . இந்த மசோதா நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும், பொருளாதாரம் மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும் .

இந்தியாவை வளர்க்க வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அது ரோஹிங்கியாவாக இருந்தாலும் சரி, வங்கதேசமாக இருந்தாலும் சரி, அவர்கள் இங்கு மோதலை உருவாக்க வந்தால், நாங்கள் அவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம்” என்று பேசினார். இதைத்தொடர்ந்து குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அமைச்சர்
”ஆதாரமற்ற பேச்சு..” மறைமுகமாக தாக்கி பேசிய ஓம் பிர்லா.. கேள்வி எழுப்பிய ராகுல்.. நடந்தது என்ன?

இந்த மசோதாவின் கீழ், தவறு செய்ததாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு வெளிநாட்டவரையும் ஒரு தலைமைக் காவலர் கைது செய்யலாம் மற்றும் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம் என்று அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com