
பீகார் மாநிலம் முசஃபர்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில்
உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது பேசிய அவர், “வாக்குகளை கவர்ந்திழுப்பதே சாதி வாரி கணக்கெடுப்பின் நோக்கம். இதில் யாதவர்கள், இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகமாக காட்டப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் நிர்பந்தத்திற்கு பயந்து நிதிஷ் குமார் இவ்வாறு செய்துள்ளார்.
எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டுவது மூலம் நேபாளம், வங்கதேச எல்லைகளில் பெரிய பிரச்னை ஏற்படும். இதர
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நிதிஷ் குமார் அரசு அநீதி இழைத்துள்ளது. எனவே நிதிஷ் குமார் தனது பிரதமர் பதவி கனவை கைவிட வேண்டும். INDIA கூட்டணியின் அமைப்பாளராக கூட அவரை பிற கட்சிகள் அறிவிக்கவில்லை” என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பில் யாதவர், இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறுவது தவறு என ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம்
கட்சிகள் தெரிவித்துள்ளன.