\
Akhilesh Yadav Releases Samajwadi Party Manifesto for UP Elections
சமாஜ்வாதி தேர்தல் அறிக்கைX

உ.பி. தேர்தல் | ’300 யூனிட் இலவச மின்சாரம்’ - கவனம் பெறும் அகிலேஷ் யாதவின் தேர்தல் அறிக்கை!!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
Published on: 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டு முறை பாஜக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டி வருகின்றது. அதே போல கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியிருந்த நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி தீவிரம் காட்டி வருகிறது.

AI

இதற்கிடையே சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்ட பேச்சு வார்த்தையில், காங்கிரஸுக்கு 26 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தக்கூட்டணி அமைந்தால், பாஜகவுக்கு மேலும் கடுமையான போட்டியை சமாஜ்வாதி அளிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில் தான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் கவனம் பெற்றுள்ளன.

அதில், உத்தரப்பிரதேசத்தில் பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். 2 முதல் 3 கோடி இளைஞர்களுக்கு பிற துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, ஏழை மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு 5 ரூபாய்க்கு உணவு, ஆட்சி அமைத்த மூன்று மாதங்களுக்குள் மாநிலம் தழுவிய சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.

Akhilesh Yadav Releases Samajwadi Party Manifesto for UP Elections
ரூ.23.3 லட்சம் கோடியை எட்டிய தங்கக்கடன்! இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்! அதிர வைக்கும் புள்ளிவிவரம்!