’வலிமை’ படப்பிடிப்பு நிறைவு: விரைவில் இரண்டாம் பாடல் தேதி அறிவிப்பு
அஜித் நடிக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் தற்போது ரஷ்யா சென்றனர்.
ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர். இந்த நிலையில், ’வலிமை’படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதையொட்டி படக்குழுவினர் இன்று காலை சென்னை திரும்பியுள்ளனர். இம்மாதத்தில், இரண்டாம் பாடலுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியீட்டுத் தேதியும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யா ராஜேஷின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்

