ஏர் டாக்ஸிஎக்ஸ் தளம்
இந்தியா
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏர் டாக்சி சேவை.. அமைச்சர் தகவல்!
நாட்டில் முக்கிய நகரங்களில் விரைவில் ஏர் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படுமென மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
நாட்டில் முக்கிய நகரங்களில் விரைவில் ஏர் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படுமென மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
ராம் மோகன் நாயுடுx page
புனேவில் நடந்த விமானப் போக்குவரத்து தொடர்பாக கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், முதற்கட்டமாக டெல்லி, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ஏர் டாக்சி சேவை கொண்டுவரப்படுமென கூறினார். போக்குவரத்து நெரிசலை குறைக்க இத்திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், 2026ஆம் ஆண்டில் இதற்கான சோதனை தொடங்குமெனவும் அமைச்சர் ராம்மோகன் நாயுடு குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் ஏர் டாக்சி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் உலகளவில் முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் ஏர் டாக்சியை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.