பெங்களூரு | விமானத்தை இயக்குவதற்கு முன்பு மயங்கி விழுந்த ஏர் இந்தியா விமானி!
பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்குவதற்கு சற்று முன்பு ஏர் இந்தியா விமானி மயங்கி விழுந்தார். பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு A12414 என்ற விமானத்தை விமானியால் இயக்க முடியாமல் போனது என்றும் அதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகளை டெல்லி அழைத்துச் செல்ல வேறொரு விமானியை ஏற்பாடு செய்ததாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. விமானத்தின் அறையில் விமானி இருந்ததாகவும், விமானத்தை இயக்குவதற்கு ஏற்றுக்கொள்ள கட்டாய ஆவணங்களில் உள்ள தொழில்நுட்ப பதிவில் அவர் கையெழுத்திடவிருந்த நிலையில், அவர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
முன்னதாக, விமானப் பணியாளர் பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறியதாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கண்டித்திருந்தது. விமான நிறுவனத்தின் திட்டமிடல் துறையில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பட்டியல் தலைவர் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தது கவனம்பெறுகிறது.