ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்முகநூல்

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியின் மீது சிறுநீர் கழித்த நபர்!

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியின் மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி.
Published on

தகவல்களின்படி, ஏர் இந்தியா விமானம் AI 2336 இன் வணிக வகுப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை (9.4.2025) அன்று டெல்லியில் இருந்து பாங்காக் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் தனது சக பயணியான நிர்வாக இயக்குநர் என்று கூறப்படும் நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனே பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்த விமான பணிப்பெண்ணிடம் தெரிவிக்க, இருவருக்கும் மாற்று துணிகள் வழங்கப்பட்டது. தன் தவறுக்காக பயணி பாதிக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. விமானம் தரையிரங்கிய பிறகு புகார் ஏதும் அளிக்காமல் அவர் சென்று விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை உறுதி செய்த ஏர் இந்தியா, இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

பாதிக்கப்பட்ட பயணி ஜப்பானை சோ்ந்தவா் என்றும், அவரது பக்கத்து இருக்கையில் அமா்ந்திருந்த இந்தியப் பயணி, மது போதையில் சிறுநீா் கழித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏர் இந்தியா விமானம்
’கிப்லி’ பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்!

இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவிக்கையில், ‘இச்சம்பவத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது; விமான நிறுவனத்திடம் விளக்கம் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால், சிறுது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com