தலைப்புச் செய்திகள் | கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னை முதல் MyV3 Ads நிபந்தனைகளுடன் அனுமதி வரை!

இன்றைய மதிய தலைப்புச் செய்தியானது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பிரச்னை முதல் மை வி3 நிறுவனம் செயல்பட அனுமதி வரை இன்றைய முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
 • கிளாம்பாக்கத்திலிருந்து போதிய அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று ஆய்வு செய்ய சென்ற அமைச்சர்களிடம் பயணிகள் கோரிக்கை.

 • கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதலாக 612 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் நேற்றைய தினம் 1,07,000 பேர் பயணித்துள்ளதாகவும் அறிக்கை.

 • கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என கூறப்படுவது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

 • சென்னை அருகே மண்ணிவாக்கத்தில் வரும் ஏப்ரல் முதல் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.

 • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான 44 புறநகர் ரயில் சேவைகள் இன்று பிற்பகல்வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 • கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இலங்கை கடற்படையின் செயலை மத்திய பாஜக அரசு தடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

தலைப்புச் செய்திகள்
மக்களவையில் எதிரொலித்த மீனவர்களின் கோரிக்கை முழக்கம்
 • சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கிராமத்தில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது. இரு சமூக பிரச்னையில் 17 ஆண்டுகளாக விழா தடைப்பட்ட நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 • முடக்கப்பட்டிருந்த மை வி3 ஆட்ஸ் செயலி, மீண்டும் செயல்பட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் செயலியில் புதிய நபர்களை சேர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவையில் போராட்டம் நடத்திய நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் செயலி மீண்டும் செயல்படுகிறது.

தலைப்புச் செய்திகள்
கோவை: மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டம் - MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தன் கைது
 • சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் குடும்பத்தினரிடம் ரத்த பரிசோதனை. ஹிமாச்சலில் விபத்தில் சிக்கி காணாமல்போன மகன் வெற்றி துரைசாமியை தேடும்பணி 8ஆவது நாளாக தீவிரம்.

 • “சக்திக்கு மீறிய மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு நிதியின்றி தத்தளிக்கும் மாநில அரசுகளுக்கு உதவ இயலாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.

 • மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் நான்கே மாதங்களில் தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம். புதிய ஆணையராக தினேஷ்குமாரை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 • கோவையில் பில்லூர் 3ஆவது கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின்கீழ் தண்ணீர் விநியோகத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பணிக்கப்பட்டுள்ளது.

 • பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதியளித்துள்ளார். அமித் ஷா அழைப்பு விடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இபிஎஸ் திட்டவட்டம்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை - இபிஎஸ் உறுதி
பாஜகவுடன் கூட்டணி இல்லை - இபிஎஸ் உறுதி
 • சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் மின்சாரம் தாக்கி 6ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியின்போது விபரீதம்.

 • இன்று பிற்பகல் சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு தீவிரம்.

 • மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைக்க அண்ணா அறிவாலயத்தில், வார் ரூம் அமைத்தது திமுக கட்சி.

 • மணப்பாறை அருகே புனித அந்தோணியார் ஆலய விழாவையொட்டி விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி. இதில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றதாக தகவல்.

 • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் நீடிக்கிறது இழுபறி. இந்நிலையில் தனது கட்சி உதவியில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என பிலாவல் பூட்டோ திட்டவட்டம்.

 • காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் பறிபோன பிஞ்சுக் குழந்தையின் உயிர். துப்பாக்கி குண்டுகளின் சத்தத்திற்கு நடுவே, சிறுமியின் அபயக்குரல் கேட்போரை கண்கலங்க வைக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com