\
Adani Group unveils Rs 1 lakh crore West Bengal plans
Gautam AdaniANI

குஜராத்தை அடுத்து மேற்கு வங்கம்.. ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. கால்பதிக்கும் அதானி!

கொல்கத்தாவின் புகழ்பெற்ற துர்கா பூஜை கலை மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு செல்ல மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) செய்யப்பட்டுள்ளன.
Published on: 
Summary

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, மேற்கு வங்க மாநிலத்தில் 2035-ஆம் ஆண்டுக்குள் ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வதற்கான விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி மாநிலத்தில் துறைமுகங்கள், கடல்சார் தளவாடங்கள், மின் உற்பத்தி, மின் விநியோகம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரோப்வே திட்டங்கள் , பசுமை சிமெண்ட் ஆலைகள் மற்றும் அதிவேக தரவு மையங்கள்செயல்படுத்தப்பட உள்ளன.

இந்தியாவின் தொழிலதிபரான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, தனது வணிகத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் 2035-ஆம் ஆண்டுக்குள் ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வதற்கான விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி மாநிலத்தில் துறைமுகங்கள், கடல்சார் தளவாடங்கள், மின் உற்பத்தி, மின் விநியோகம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரோப்வே திட்டங்கள் , பசுமை சிமெண்ட் ஆலைகள் மற்றும் அதிவேக தரவு மையங்கள்செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் மேற்கு வங்கத்தை வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் முக்கிய வணிக மையமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

gautam adani
gautam adaniANI

இதன் முதற்கட்டமாக, கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் பகுதியின் 'பெங்கால் சிலிக்கான் வேலி'யில் 51.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் 2,000 படுக்கைகள் கொண்ட 'அதானி ஆரோக்கிய மந்திர்' மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதில் மருத்துவக் கல்லூரி மற்றும் உலகத் தரத்திலான ஆராய்ச்சி மையமும் அடங்கும். 2,000 படுக்கைகளில் 1,000 படுக்கைகள் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரசு காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்படும். இத்திட்டம் மூலம் சுகாதாரத் துறையில் 10,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. அடுத்து, கொல்கத்தாவின் வரலாற்று சிறப்புமிக்க 'ரைட்டர்ஸ் கட்டிடம்' (Writers' Building) மற்றும் 'குமார்துலி காட்' (Kumartuli Ghat) ஆகியவற்றைச் சீரமைக்க அதானி குழுமம் ஆதரவளித்துள்ளது. மேலும், கொல்கத்தாவின் புகழ்பெற்ற துர்கா பூஜை கலை மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு செல்ல மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) செய்யப்பட்டுள்ளன. தவிர, குஜராத்தைப்போன்று மேற்கு வங்காளத்தின் கிழக்கிலும் அதானி குழுமத்தின் 'இரண்டாவது கர்மபூமி’ அமையவுள்ளது.

Adani Group unveils Rs 1 lakh crore West Bengal plans
அதானியை எதிர்க்கும் காங்கிரஸ்.. டி.கே.சிவகுமாரை தேடிவந்த அதானி - கர்நாடகாவில் திடீர் திருப்பம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com