நொறுக்குத்தீனி உட்கொள்ளும் பழக்கம் அதிகரிப்பு - பாஜக எம்.பி சுஜித்குமார்!
இந்தியர்களிடையே நொறுக்குத் தீனி உட்கொள்ளும் பழக்கம் பல மடங்கு அதிகரித்துவிட்டதாகவும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகளுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதோடு கட்டுபாடுகளையும் அதிகரிக்கவேண்டும் என்றும் பாஜக எம்.பி சுஜித்குமார் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஒடிஷாவிலிருந்து தேந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினரான சுஜித், 2023இல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி 2006 இலிருந்து 2019க்குள் நொறுக்குத் தீனி உண்பது 40% அதிகரித்துள்ளதாகக் கூறினார். நொறுக்கு தீனி உண்பதற்கும் தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்திய மக்கள்தொகையில் 41% சிறார்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,நொறுக்குத் தீனிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற குடிமக்கள் உருவாவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.