\
Actress Uma Shankari completes final chemotherapy stage after
உமா சங்கரி உமா சங்கரி insta

பயத்தில் உறைந்த நாட்கள்! புற்றுநோயுடன் போராடிய பிரபல நடிகை.. சிகிச்சையைக் கடந்து நெகிழ்ச்சிப் பதிவு!

புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை தற்போது தனது சிகிச்சையில் முக்கியமான கட்டத்தைக் கடந்துள்ளார். அப்படி யார் இந்த உமா சங்கரி? அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது? விரிவாகப் பார்க்கலாம்
Published on: 

தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகைகளில் ஒருவர்தான் உமா சங்கரி. மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதுமட்டுமின்றி, 'வீரநடை', 'வானவில்', 'கடல் பூக்கள்', 'தென்றல்', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

உமா சங்கரி
உமா சங்கரிஉமா சங்கரி insta

இந்நிலையில், கடந்த ஜூன் மாத இறுதியில் தனக்கு ஆரம்பக்கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உமா சங்கரி சமூக வலைதளத்தில் அறிவித்தார். இந்தச் செய்தி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், குடும்பத்தினரின் ஆதரவுடன் இந்தப் பாதிப்பை எதிர்கொள்ள முடிவு செய்து சிகிச்சையைத் தொடங்கியதாகவும் கூறியிருந்தார். மேலும், தனது குடும்பத்தினரின் ஆதரவே இந்தப் போராட்டத்தில் தனக்குப் பெரிய பலமாக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்தார். சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். குறிப்பாக, சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தாலும், ஒவ்வொரு நாளாக அந்தச் சவால்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டு வருவதாகவும், உடலளவிலும் மனதளவிலும் வலிமையாக உணரும் நாட்களைக் கொண்டாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

உமா சங்கரி
உமா சங்கரிஉமா சங்கரி insta

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த உமா சங்கரி, கீமோதெரபி சிகிச்சையின் இறுதிக்கட்டத்தை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதில், கீமோதெரபி சிகிச்சை மிகவும் கடினமானதாக இருந்தாலும், அதைவிடத் தான் வலிமையானவளாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இறுதிக்கட்ட சிகிச்சையை முடித்திருப்பது தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கிய முதல் படி என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது பதிவுக்குக் கீழே ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Actress Uma Shankari completes final chemotherapy stage after
12,500 மடங்கு பாதரசம்! வெள்ளையாக அழகு க்ரீம்! சிறுமி உயிருக்கே வந்த ஆபத்து?